நன்கொடை

அங்கத்துவமும் நன்கொடையும்:

சிவனடியார்களுக்கு வணக்கம்.

திருவள்ளுவர் ஆண்டு 2041,  சித்திரைத் திங்கள் 1ம் நாள் (15.04.2010) ஆன்மீகச் சேவையினை இணையமூலம் உலகெங்கும் பரவச் செய்வதற்காக சுவிற்சர்லாந்து அருள்மிகு சிவன் கோவிலினால் ஆரம்பிக்கப்பட்ட சிவன் தொலைக்காட்சியானது தனது சேவையினை இன்றுவரை வழங்கிவருகின்றது.

தாயகத்தில் நடைபெறும் திருக்கோவில்களின் விழாக்கள், ஆன்மீக நிகழ்வுகள், புலம்பெயர்தேசத்திலுள்ள திருக்கோவில்களின் நிகழ்வுகள் போன்றவற்றை நேரலையாக அல்லது கானொளியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான அடியார்கள் பார்வையிடுகின்றார்கள்.

எமது இச்சேவையினை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு அன்பர்களிடமிருந்தும், ஆன்மீக நிறுவனங்களிடமிருந்தும்
–   ஆக்கபூர்வமான கருத்துக்கள்
–   சிவன் தொலைக் காட்சிக்கான அங்கத்துவச் சந்தா வருடமொன்றிற்கு 108.- சுவிஸ் பிராங்குகள்
–   நன்கொடைகள்
–   துறைசார்ந்தவர்களின் ஆலோசனை, இணைந்த செயற்பாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

“மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”


2015 Copyrights Reserved. Site By Carvez